அந்த படக்காட்சியைக் கண்டபோது நெஞ்சு பதறியது. டி.வியில் செய்தி வாசித்த பெண்மணி குரல் கமறியது.
நடுரோட்டில், பட்டபகலில் ஒருவனை இருசக்கர வாகனத்தால் மோதிதள்ள.. விழுந்தவனை நான்கு பேர் அடித்து நொறுக்குகிறார்கள். ஒருவன் பாறாங்கல்லை தூக்கிப் போட்டு மண்டையை உடைக்கிறான். மீண்டும் மீண்டும் கல்லை தூக்கி வீசுகிறான். அடிபட்டவன் செத்தே போகிறான்.
இது ஏதோ சினிமாவுக்கான படபிடிப்பு இல்லை என்பதை வேடிக்கைப் பார்க்கிற ஜனங்களுக்கு யாரும் சொல்லவில்லை போலிருக்கிறது. ரொம்பவே ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். சிக்னல் விழவில்லையே சீக்கிரம் கடந்துவிடலாம் என்ற அவசரம் பலரிடம்.
உயிருக்குப் போராடுகிறவனை காப்பாற்ற யாருக்கும் தோன்றாமல் போனது. தலையிட்டால் நம்ம தலையும் பொளந்திருவானோ என்று தோன்றியிருக்கலாம். வேறு யாராவது கதா நாயகர்கள் வந்து காப்பாற்ற வருவான் என்று நினைத்தார்களோ தெரியவில்லை. நாற்பது ஐம்பதுபேருக்கு மேல் இருக்கிறார்கள். அவர்கள் நான்கு பேர். விரட்டியடித்திருக்க முடியாதா.?
நமக்கும் மட்டும் இது நிகழாமல் இருந்தால் போதும் என்று நழுவி விடும் சமூகம்.
கூட்டு புழுபோல் மாறிக் கொண்டிருக்கிற வாழ்க்கை.வெறும் பார்வையாளர்களா நாம்.
கோவையில் நடந்த அந்த கொடூர நிகழ்ச்சி இங்கே

3 பகிர்வுகள்:
மக்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதுதான் காரணம்.
koduramaaka irukkirathu....
Thank you for sharing this post.
quesdtial
Post a Comment